search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தைப்பூச விழா"

    தேனி மாவட்டத்தில் இருந்து பழனியில் தைப்பூச விழா பாதுகாப்பு பணிக்காக 387 போலீசார் சென்றுள்ளனர்.
    தேனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழா வருகின்ற 21-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    திருவிழாவின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இந்த பாதுகாப்பிற்காக தேனி மாவட்டத்தில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 20 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், 350 போலீசார் என மொத்தம் 387 பேர் தைப்பூச திருவிழா பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளனர்.

    முருகனின் 3ம் படைவீடான பழனி திருத்தலத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசத்திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    பழனி:

    பழனியில் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினசரி காலை முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடும், மாலை 8.30 மணிக்கு மேல் புதுச்சேரி சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேணு, வெள்ளி யானை, பெரிய தங்கமயில் வாகனம், மற்றும் தங்கக்குதிரை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

    விழாவில் வருகிற 20-ந் தேதி இரவு 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9.30 மணிக்குமேல் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி நான்கு ரதவீதிகளில் உலாவும் நடைபெறுகிறது.

    வருகிற 21-ந் தேதி தைப்பூசம். அன்று காலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சண்முக நதியில் தீர்த்தம் வழங்குதல். பகல் 12.40 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளளும், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    வருகிற 24-ந் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.

    தைப்பூச திருவிழாவையொட்டி இம்மாதம் 19 -ந்தேதி முதல் 23- ந்தேதி வரை 5 நாட்களுக்கு தங்கரதத்தில் சாமி புறப்பாடு நடைபெறாது என்றும், தைப்பூச திருவிழா 5 ம் திருநாளான 19 ந்தேதி திருக்கோவில் சார்பில் தங்கரதபுறப்பாடு நடைபெறும் என்றும், கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×